ETV Bharat / state

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை வெல்லப்போகும் அணி எது? - ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி 2023

சென்னையில் நடைபெற்று வரும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் (Asian champions trophy 2023) சாம்பியன்ஸ் பட்டம் பெறும் அணி எது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Asian Champions Hockey Cup
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி
author img

By

Published : Aug 12, 2023, 3:56 PM IST

சென்னை: கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கிய 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆகஸ்ட் 12 ) இறுதிப்போட்டியானது நடைபெறுகிறது. ஆசிய கண்டத்தில் சுமார் 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய நிலையில், நேற்றுடன் அரை இறுதி சுற்று முடிவடைந்து, இன்று இறுதி போட்டி நடைபெறுகிறது.

மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தின் புதிய அம்சங்கள்: ரூ.16 கோடி செலவில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் நூற்றாண்டு ஸ்டாண்டை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

லீக் சுற்று தரவரிசைப் பட்டியல்: 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையில் இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது நடைபெற்ற 5-லீக் போட்டியில் இந்தியா அணி 4 வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், மலேசியா அணி 5- போட்டியில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

அதேப்போல் தென் கொரியா ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜப்பான் 1-வெற்றி, 2-தோல்வி, 2-டிரா என்ற கணக்கில் 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும் உள்ளன. சீனா ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான்: நேற்று (ஆகஸ்ட் 11) நடைபெற்ற 5 மற்றும் 6வது இடத்திற்கான போட்டியில், சீனாவுக்கு எதிராக களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, சீனாவை திணறடிக்க வைத்து 6 - 1 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

அரை இறுதியில் வென்ற அணிகள்: நேற்று (ஆகஸ்ட்11) அரை இறுதிச் சுற்றில், இந்தியா - ஜப்பான் அணி மோதியது. அதில் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே இந்தியா வெற்றிப் பாதையை நோக்கி பயணித்தது. பின், ஜப்பானை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல், திறமையாக செயல்பட்டு 5 - 0 என்ற கணக்கில் இந்தியா இறுதி போட்டிக்கு நுழைந்தது.

அதேபோல், மலேசியா - தென்கொரியா அணிகள் அரை இறுதி போட்டியில் மோதியததில், முதலில் மலேசியா அணிக்கு டஃப் கொடுத்தது கொரியா அணி. பிறகு பொறுமையாக பதிலடி கொடுத்து, மலேசியா அணி கோல்களை பறக்க விட்டது. அதில் 6 - 2 என்ற கோல் கணக்கில் மலேசியா வென்றது.

கோப்பை யாருக்கு?: இறுதி ஆட்டத்தில் இந்தியா - மலேசியா மோத இருக்கிறது. இந்தியா அணி 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. மலேசியா அணி, இந்த ஆசிய சாம்பியன்ஸ் தொடங்கிய முதல் 5 தொடர்களில் தொடர்ந்து 3வது இடம் பிடித்திருக்கிறது. இம்முறை கோப்பை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

உலக ஹாக்கி தர வரிசையில், 4ஆம் இடம் பிடித்திருக்கும் இந்திய ஹாக்கி அணி, தற்போது நடைபெற்ற போட்டியில் தோல்வியை காணாத அணியாக திகழ்ந்து வருகிறது. கோப்பை வெல்ல அனைத்து வகையிலும் இந்திய அணி தயாராக இருக்கிறது. ஆனால், அரை இறுதியில், நடப்பு சாம்பியனான கொரிய அணியை துவம்சம் செய்து மலேசியா அணியை, இந்தியா அணி சற்று ஞாபகம் வைத்துக் கொண்டு ஆட வேண்டும்.

அதேபோல, லீக் போட்டியில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் ஆட்டத்தில் முதல் பாதியில் இந்திய அணிக்கு 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஒன்றைகூட இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்தனர். மாறாக ஜப்பான் அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்புகள்தான் கிடைத்தன. அதில் ஒன்றை அந்த அணி கோலாக மாற்றியது. 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஒன்றைகூட இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தது.

இந்த போட்டியில், கிடக்கும் பெனால்டி காரனர்களை பயன்படுத்தி கொண்டால், மலேசியா அணியை வெல்ல வாய்ப்பு 100 சதவீதம் இருக்கிறது. ஆனால், மலேசியா அணி உத்வேகத்துடன் இருப்பதால், இன்றைய ஆட்டத்தில்தான் முடிவு தெரியும். இந்த ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி, ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து போட்டியை காண்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.