ETV Bharat / state

தலைநகரில் மீண்டும் தலை தூக்கும் கால்நடை பிரச்னை.. சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - cow attacked old man

Chennai news: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான தீர்வு என்ன என்பதை நோக்கி பயணிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 8:56 AM IST

சென்னை: கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை மாடு முட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி, சாலைகளில் சுற்றி வரும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மாடுகள் சாலையில் அவிழ்த்து விடப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்துச் சென்றனர். இதனிடையே மாநகராட்சி ஆணையர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அது பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மாடு என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மாட்டின் உரிமையாளர் மீது எப்படி வழக்கு போட முடியும் என்று காவல் துறை குழம்பி உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, திருநின்றவூர், வெளிவட்ட சாலை, சென்னை-செங்கல்பட்டு புறவழிச்சாலை, பழைய மகாபலிபுரம் ஆகிய இடங்களில் கால்நடைகளால் நாள்தோறும் விபத்துக்கள் நிகழ்கின்றன. கால்நடைகளை வளர்ப்பவர்களின் பொறுப்பற்ற தன்மையே இதற்கான முக்கியக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கால்நடைகளால் ஏற்படும் வாகன விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால், கால்நடை பிடிக்கும் 15 வாகனங்கள் மூலமாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், அபராதத் தொகை ரூ.2,000-இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

மேலும், பராமரிப்புச் செலவாக மூன்றாம் நாள் முதல், நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.200 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,000 வசூலிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அதே மாடு பிடிக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையிலும், சாலையில் செல்பவர்களுக்கு சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கூறியதாவது, "வீட்டில் வளர்க்க வேண்டிய கால்நடைகள் எவ்வித கட்டுப்பாடின்றி, அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் திரியும் பொழுதுதான், இத்தகைய விபத்துகள் சென்னையில் அதிகமாக தற்போது நிகழ்கின்றன.

மேலும், இந்திய அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 514 மில்லியன் உள்ளது. அதாவது, இந்திய மக்கள்தொகையில் பாதி அளவிற்கான கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன என்று ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. பெருநகர சென்னையில் 30 சதவீத விபத்துகள் கால்நடைகளால் ஏற்படுகின்றன" என தெரிவித்தார்.

மேலும், இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது, “கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மாடு முட்டிய சம்பவத்திற்கு பிறகு, பெருநகர சென்னை மாநகராட்சி மூழுவீச்சில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து வருகிறோம். மாடு வளர்ப்பவர்கள் 36 அடி இடம் இருந்தால் மட்டுமே மாடுகளை வளர்க்க வேண்டும். மாடுகளை வளர்க்கும் பொழுது அவற்றை சாலைகளில் திரிய விடக்கூடாது. மாடுகளை சாலைகளில் திரிய விடுவதால் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எம்.எம்.டி.ஏ காலனி போன்ற பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது.

இந்த ஆண்டு முதல் தற்போது 2,800 மாடுகளை பறிமுதல் செய்து, ரூ.51 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6,500க்கும் மேற்பட்ட மாடுகளை பறிமுதல் செய்துள்ளோம். எவரும் உரிமை கோராத மாடுகளை நாங்கள் ப்ளூ கார்ஸ் அமைப்பிடம் கொடுத்து விடுவோம். இந்த ஆண்டில் இதுவரை 3,737 மாடுகள் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய முன்தினம் (அக்.18) 14 மாடுகளும், நேற்று (அக்.19) 10 மாடுகளும் பிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பிடிக்கபட்ட 13 உரிமை கோராத மாடுகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து, அங்குள்ள சில மாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சையை அவர் வழங்கினார். மேலும், முதியவரை முட்டிய காளையை காஞ்சிபுரம் கோசாலாவிற்கு அனுப்பட்டுள்ளது.

சட்டம் கடுமையாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது தலைகவசம் அணிவது என்பது ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் விதி. ஆனால், அபராத தொகை அதிகமாக உயர்த்திய பிறகும், நாள்தோறும் போக்குவரத்து போலீசார் பிடிப்பதும் இருப்பதால் 99% சதவீதம் பேர் தற்போது தலைகவசம் அணிகின்றனர். அதேபோல், கால்நடைகளை தெருவில் விட்டால், நாள்தோறும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தால், இதன் தாக்கம் குறையும்.

மாடு வளர்ப்பவர்கள் வியாபார நோக்கம் இல்லாமல், கிராமப்புறங்களில் பார்க்கும் விதாமாக பார்த்தால், மனித வாழ்வில் ஒர் அங்கமாக பார்த்தால், இதற்கு தீர்வு கிடைக்கும். மேலும், கால்நடைகளைப் பராமரிப்பவர்கள் அவற்றை சாலைகளில் திரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தங்களின் கால்நடைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுக்க அவர்களை வலியுறுத்தும் வகையில், அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-இன் அடிப்படையில், கால்நடைகள் வளா்ப்பதற்கான விதிமுறைகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு” என்று கூறினார்.

இதையும் படிங்க: பங்காரு அடிகளார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.