ETV Bharat / state

தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக்கோரிய வழக்கு! - அரசு பதிலளிக்க ஆணை! - chennai highcourt

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு மார்ச் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கு தமிழ்நாடு அரசு பதில் என்ன?

author img

By

Published : Dec 22, 2020, 1:58 PM IST

தூய்மை இந்தியா

தோழர் சட்ட மையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில், ” தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை.

தூய்மை பணியாளர்கள் நிலை

தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும் போது மரணம் அடைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

மேலும், தூய்மை தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பியதால், இதனை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.

பிரதமர் மோடியின் பிரதான திட்டமான ‘ஸ்வச் பாரத்’ என்றழைக்கப்படும் தூய்மை இந்தியா

இந்த பரிந்துரை மீது தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் தூய்மை பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் ” என மனுவில் கோரியுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கு இடர்படி வழங்கப்படுவதாகவும், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கு தமிழ்நாடு அரசு பதில் என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கு தமிழ்நாடு அரசு பதில் என்ன?
தமிழ்நாடு அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய தவறினால், நீதிமன்றத்துக்கு உதவியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர் .இதையும் படிங்க: கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு குற்றம் நிரூபணம்: சிபிஐ நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.