சென்னை: நவ.12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு தான். இவற்றை வாங்குவதற்காக மக்கள், கடை வீதிகளை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வேலை செய்து வருவோர்களும், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் வேலை செய்யும் நகரங்களில் இருந்து புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கிச் செல்ல முனைப்பு காட்டுகின்றனர். மேலும் பலர் பட்டாசுகளை உள்ளூர் கடைகளில் வாங்குவதை விட, பட்டாசு நகரமான சிவகாசி போன்ற ஊர்களுக்கு நேரில் சென்று வாங்குவதை தான் அதிகம் விரும்புகின்றனர். அப்படியாக வாங்கும் பட்டாசுகளை பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ தான் கொண்டு செல்கின்றனர்.
ரயில் பயணங்களின் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இத்தடையை மீறி, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால், ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை இரயில்வே காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை கோட்டத்தில் உள்ள 245 இரயில் நிலைகளில் 1300 போலீசார், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், போலீசார் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களில் ரயில்களில் அதிக திருட்டு நடைபெறும் என்பதற்காக, ரயில் பெட்டிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Let's keep our train travel safe and joyous!
— DRM MADURAI (@drmmadurai) November 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Safety Organisation of Southern Railway Madurai Division has created a poster to raise awareness about the dangers of carrying crackers during travel. Let's celebrate responsibly!#RailwaySafety #DeepavaliAwareness #drmmadurai pic.twitter.com/FLibY7pT16
">Let's keep our train travel safe and joyous!
— DRM MADURAI (@drmmadurai) November 9, 2023
The Safety Organisation of Southern Railway Madurai Division has created a poster to raise awareness about the dangers of carrying crackers during travel. Let's celebrate responsibly!#RailwaySafety #DeepavaliAwareness #drmmadurai pic.twitter.com/FLibY7pT16Let's keep our train travel safe and joyous!
— DRM MADURAI (@drmmadurai) November 9, 2023
The Safety Organisation of Southern Railway Madurai Division has created a poster to raise awareness about the dangers of carrying crackers during travel. Let's celebrate responsibly!#RailwaySafety #DeepavaliAwareness #drmmadurai pic.twitter.com/FLibY7pT16
நீங்கள் பட்டாசுகளை ரயில்களில் கொண்டு செல்லலாம் என்று எண்ணியிருந்தால், அதை கைவிட்டுவிடுங்கள். சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான ரயில் விபத்துக்கள் நடைபெற்றதின் எதிரொலியாக, இந்த பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம், ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய கேஸ் சிலிண்டரை எடுத்து சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழக்கூடாது என்ற நோக்கில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: நீதிமன்றம் அறிவித்த நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை - சென்னை கூடுதல் காவல் ஆணையர் எச்சரிக்கை!