ETV Bharat / state

‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

நாளை தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? என்பதை தெரிந்து கொள்வோம்.

red alert
author img

By

Published : Oct 21, 2019, 5:59 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. சமீபகாலமாகவே மழை என்றாலே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என விதவிதமான வித்யாசமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழை , கன மழை சரி அது என்ன ரெட் அலர்ட்? என்ற கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது.

கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் வானிலை தொடர்பாக அரசு நிர்வாகங்களுக்கும், பொதுமக்களுக்கும் நான்கு நிறங்களில் வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது.

‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..?(Red Alert)

வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த ரெட் அலர்ட் விடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கைகளிலேயே மிக அபாயகரமானது இந்த ரெட் அலர்ட் எனும் சிவப்பு எச்சரிக்கை ஆகும்.

‘பச்சை அலர்ட்’ என்றால் என்ன..? (Green Alert)

இந்த அலர்ட் விடுக்கப்படும்போது மோசமான வானிலைக்கு வாய்ப்பே இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்றும் பொருள்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.

‘மஞ்சள் அலர்ட்’ என்றால் என்ன..?(Yellow Alert)

வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது இந்த மஞ்சள் அலர்ட் ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது. மேலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும்.

‘ஆம்பர் அலர்ட்’ என்றால் என்ன..? (Amber Alert) :

ஆரஞ்சு நிறமாக இருந்தால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என இந்த எச்சரிக்கை தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நலம்.

மேலும்,

*இடி மற்றும் மின்னலுக்கு வாய்ப்பே இல்லை என்பதை நீல நிற எச்சரிக்கை குறிக்கிறது.
*இளம் ஊதா நிற எச்சரிக்கையை பொறுத்தவரை, பலத்த மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் எனப் பொருள்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Intro:Body:

     *ரெட் அலெர்ட் என்றால் என்ன...? வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எச்சரிக்கை நிறங்கள் என்னென்ன?*

_*இயற்கை பேரிடரை பொறுத்தவரை வானிலை ஆய்வு மையம் அரசு மற்றும் மக்களுக்கு 4 நிறங்களிலான வண்ணங்களில் எச்சரிக்கையை விடுகிறது.*_

_*பொதுவாக, வானிலை மையம், 24 மணி நேரம், 48 மணி நேரம் என குறுகிய கால எச்சரிக்கைகளையும். ஒரு வாரம் முதல் ஒரு மாதகாலம் வரையிலான நீண்ட கால வானிலை கணிப்புகளையும் வெளியிடுகிறது.*_

_*வானிலை தொடர்பாக அரசு நிர்வாகங்களுக்கு நான்கு நிறங்களில் வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது*_

_*வானிலை மையம், அரசுக்கு பச்சை நிற எச்சரிக்கை விடுத்தால், மோசமான வானிலைக்கு வாய்ப்பே இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என்றும் பொருள்படும். மஞ்சள் நிறமாக இருந்தால், வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என பொருள்.*_

_*ஆரஞ்சு நிறமாக இருந்தால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என பொருள்படும்.*_

_*வானிலை ஆய்வு மையம், சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்தால், மிகக் கன மழை பெய்யக்கூடும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக தொடங்கவேண்டும் என்பதை குறிக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கைகளிலேயே மிக அபாயகரமானது சிவப்பு எச்சரிக்கை .*_

_*இதுதவிர, ஐந்துவித பொது முன்னறிவிப்புகளை, வானிலை மையம், பொதுமக்களுக்காக வெளியிட்டு வருகிறது.*_

_*இடி மற்றும் மின்னலுக்கு வாய்ப்பே இல்லை என்பதை நீல நிற எச்சரிக்கை குறிக்கிறது.*_

_*பச்சை நிறம், மிதமான இடி, மின்னலுடன் பலத்த மழைக்கான எச்சரிக்கையை குறிப்பதாகும்*_

_*இளம் ஊதா நிறத்தை பொறுத்தவரை, பலத்த மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் எனப் பொருள்.*_

_*வானிலை மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தால் இடி மற்றும் மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும்*_

_*இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிகக் கனமழை அபாயம் இருந்தால் சிவப்பு நிற முன்னறிவிப்பு வெளியிடப்படும்.*_

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.