ETV Bharat / state

1989ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? யார் சொல்வது உண்மை..! - மத்திய அமைச்சர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்தது வருத்தம் அளிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்

யார் சொல்வது உண்மை..!
யார் சொல்வது உண்மை..!
author img

By

Published : Aug 12, 2023, 11:14 PM IST

Updated : Aug 13, 2023, 8:41 AM IST

முதலமைச்சர் கூற்றுக்கு தமிழிசை சவுந்தரராஜனின் பதில்

முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியது: பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அப்போது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மாத்தின் போது, 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமனின் கூற்று குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த முக ஸ்டாலின், நிர்மலா சிதாராமன் வாட்ஸ் ஆப்பில் வரலாற்றை படித்துவிட்டு பேசுவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்க்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்றும் அப்போது அவையில் இருந்த அனைவருன் அறிவார்கள் என்று கூறினார்.

மேலும் இது போன்று சட்டமன்றத்தில் நடத்த வேண்டும் என்பதற்காக தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஒத்திகை பார்த்ததாகவும், அதை முன்னாள் அமைச்சரும், தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான திருநாவுக்கரசு சட்டமன்றத்தில் பேசியதும் அவைக்குறிப்பில் இருப்பதை சுட்டி காட்டி, சட்டமன்ற நிகழ்வை நிர்மலா சீதா ராமன் பொய்யாக திரித்து பேசுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் தெலங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா பற்றி நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்றும், வாட்ஸ் ஆப்பை பார்த்து பேசி இருப்பார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

மறைந்த பெண் தலைவர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்ட சம்பவம் உண்மை. கொடூரமாக தாக்க வந்தபோது கிழிந்த உடையுடன் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தது உண்மை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சட்டமன்றத்தில் நடந்த மோசமான நிகழ்வை எடுத்து சொன்னதை தமிழக சரித்திரம் மறைக்கப்படும் அளவிற்கு இலகுவாக சொல்லி உள்ளார்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அப்போது மூப்பனார் எதிர்கட்சித் தலைவர், எனது தந்தை குமரி ஆனந்தன் துணைத் தலைவர். இந்த சம்பவத்திற்கு நானே சாட்சி. சட்டமன்றத்தில் புத்தகங்கள் பறந்தன, போடியம் பறந்தன. இதில் எனது தந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கட்டுடன் சென்றபோது பொய் கட்டு என சொன்னபோது எக்ஸ்ரேவை காட்டிய நிகழ்வுகள் நினைவு வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு துர்திஷ்டவசமானது. ஆனால் நடக்கவே இல்லை என சொல்லும் போது வருத்தமாக உள்ளது. முதலமைச்சர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்த கருத்து தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக மறுப்பு தெரிவிக்கிறேன்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புத்தகம், போடியம் பறந்த போது மற்றவர்கள் மீது பட்டு விடக்கூடாது என்பதற்காக தடுத்த போது தன் தந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இதற்காக அவர் நிறைய நாள் கட்டுடன் இருந்தது உண்மை என்றும். அப்படிப்பட்ட நிகழ்வு நடக்கவே இல்லை என்று சொல்லும் போது வருத்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்.. ஆளுநர் பதிலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்!

Last Updated : Aug 13, 2023, 8:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.