ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

cm stalin  stalin  Welfare scheme  disable people  Welfare scheme for disable people  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  நலத்திட்ட உதவிகள்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  மு க ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Oct 9, 2021, 2:32 PM IST

சென்னை: தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று (அக்.9) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன்படி இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 1,228 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதன் அடையாளமாக ஐந்து நபர்களுக்கு ஸ்கூட்டரும், 9,173 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதன் அடையாளமாக ஐந்து நபர்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் உதவித் தொகையும் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதலமைச்சர்

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி, பணி காலத்தில் உயிரிழந்த நபர்களின் வாரிசுகள் மூன்று நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியும், ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பதவியும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஜனநாயக உரிமை மறுப்பா? - தேர்தல் பணிக்குச் சென்றோர் பரிதவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.