கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.