தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "121 ரத்த மாதிரிகளின் சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. 11 லட்சம் N95 முகக் கவசங்களும், 2500 வென்டிலேட்டர்களும் வாங்குவதற்கு ஆவண செய்துள்ளோம்.
மொத்தமாக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய்த் தடுப்பு பணிகள் விரைவாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அரசு அமைத்துள்ள 11 குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர். 199 நாடுகளில் பரவியுள்ள இந்த நோயால், பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்தியாவில் 27 நபர்களும், தமிழ்நாட்டில் ஒருவரும் உயிரிழந்தனர்.
கூடுதலாக 17 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 67 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை 17,089 படுக்கைகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,108 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 14 மையங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மூன்று மையங்கள் ஏற்படுத்தப்படும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை ஐந்து பேர் குணமடைந்துள்ளனர். தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் போஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு பலமுறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசிடம் உதவி கோரும் வடமாநில தொழிலாளர்கள்!