ETV Bharat / state

விநாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு.. அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம்

chennai adyar river flood warning: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதையொட்டி அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

water released from Chembarambakkam TNSDMA warning to people near Adyar river bank through alert message
அடையாறு கரையோர மக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் அலார்ட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 1:22 PM IST

சென்னை: இயற்கை பேரிடர் காலங்களில் அவசர முன்னெச்சரிக்கை தகவல் அளிப்பது குறித்து நாடு முழுவதும் கடந்த மாதம் சோதனை அடிப்படையில் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதியோடு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

மழை பொழிவு நாட்களில் அதிகளவு மழை இருந்தாலோ அல்லது வெள்ள நீர் வரப்போகிறது, அல்லது அருகில் உள்ள நீர் தேக்கத்திலருந்து அதிகளவு உபரி நீர் திறந்து விட போகிறார்கள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு ப்ராட்கேஸ்டிங் சிஸ்டம் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை மாநில பேரிடர் கட்டுபாட்டு மையத்திலிருந்து இந்த சோதனை மேற்கொள்ளபட்டது.

வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தொடங்கி பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையை பொருத்தவரை விட்டுவிட்டு மழை பொழிவு இருந்தாலும், கன மழையாகவே இருக்கிறது. இதனால் சென்னைக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்ககூடிய முக்கிய நீர் தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகிறுது.

இதில் சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், முக்கிய ஏரியாகவும் விளங்க கூடிய செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வந்த நிலையில், நேற்று 100 கன அடி உபரி நீர் வெளியேற்றபட்டது. இந்நிலையில் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் நீர் தேக்கத்திற்கு அதிகளவு நீர்வரத்து காரணமாக ஏரியிலிருந்து இன்று உபரி நீர் திறந்து விடபடுவது 1000 கன அடியாக உயர்த்தபட்டது.

இது குறித்து காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை காரணத்தினால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவு உயர்ந்து வருகிறது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் வெளியேற்றம் இன்று (29.11.23) காலை 9 மணிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பெய்து வருவதால் கூடுதல் நீர்வரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து தற்போது நீர்வரத்து 500 கனஅடியாகவும், ஏரியின் முழு உயரமான 24.00 அடியில் தற்போது 22.35 அடியாகவும் உள்ளது. தற்போதைய முழு கொள்ளளவான 3645 mcft யில் 3210 mcft ஆக உள்ளது” எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனால் மாநில பேரிடர் கட்டுபாட்டு மையத்திலிருந்து அடையாறு கரையோர மக்களுக்கு இன்று காலை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பபட்டுள்ளது. அதில் இன்று செம்பரம்பாக்கம் நீர் தேக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க: பொதுப்பணித்துறைக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.