ETV Bharat / state

ஊதிய ஒப்பந்த விவகாரம் - அசோக் லேலண்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Ennore Ashok Leyland

ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து, அசோக் லேலண்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அசோக் லேலண்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அசோக் லேலண்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 30, 2021, 10:09 PM IST

சென்னை: எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் 840 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவேற்றப்படும். இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஒப்பந்தம் முடிவு செய்ய கூடுதலாக ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக 2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. மூன்று ஆண்டுகாலமாகியும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாததால், ஊழியர்கள் போதிய வருமானமின்றி தவிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பேச்சுவார்த்தை

இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆக.13 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் முன்னிலையில், ஆகஸ்ட் 23,24 மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், தொழிற்சாலை நிர்வாகம் எந்தவித முடிவுக்கும் உடன்படாமல் இருப்பதால் பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. மேலும், ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றும் முன், 250 ஊழியர்களை கட்டாய விருப்ப ஓய்வில் செல்லவும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆர்பாட்டம்

எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி கத்திவாக்கம் நகராட்சி அலுவலகம் எதிரே அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம் பவுண்டரி டிவிசன் சார்பில், சங்க தலைவர் எம். ராஜகாந்தம் தலைமையில், சங்க வழக்கறிஞர் திருமூர்த்தி முன்னிலையில் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நான்கு ஆண்டுகளில் 68 யானைகள் மின்சாரம் பாய்ச்சி பலி: ஆர்டிஐ தகவல் தரும் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.