பழமையான மற்றும் கிளாசிக் கார்களுக்கான நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு(2020) தொடக்கத்தில் ஹிஸ்டரிகல் கார் சங்கம் (The Historical cars Association) உருவாக்கப்பட்டது. டெல்லியில் ஒரு புதிய கூட்டமைப்பின் துணைத் தலைவரான ரஞ்சித் பிரதாப், பழைய கார் பிரியர்களிடையே நட்புறவு வளர்ப்பதற்காக "எஸ் இந்தியா" என்ற சங்கத்தை நிறுவினார். இந்த சங்கம் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
ஒரு வருடத்தில் குறைந்தது 2 நிகழ்வுகளை நடத்த மற்ற கிளப்புகளுக்கு எஸ் இந்தியா சங்கம் உதவ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இன்று (செப்.27) சென்னை காமராஜ் சாலையில் நடைபெற்ற கார் பேரணியில் 16 விலையுயர்ந்த பழமையான கார்கள் பங்கேற்றன. இதை தென்னிந்தியாவின் ஐ.டி.சி தலைவர் ஜுபின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிறகு அந்த கார்கள் அங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டல் துரியாக்கு (ஓஎம்ஆர்) ஒரு அணிவகுப்பில் கொண்டு செல்லப்பட்டது. இதை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: ஐஐடிகளில் சேர நடைபெற்றுவரும் ஜே.இ.இ தேர்வு!