தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டங்களை உடனடியாக மீண்டும் நடத்த வலியுறுத்தி, தன்னாட்சி, சட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட இயக்கங்கள் இணைந்து கிராம சபை மீட்பு வாரத்தை அக்டோபர் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடத்தி வருகின்றன.
அதன்படி, இன்று (அக்.17) ஆம் தேதி பொது மக்களுக்கு மூன்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில்,
1. ‘கிராம சபையை உடனே நடத்துக!’ என்ற வாசகத்தைக் கையில் ஏந்தி 30 நிமிடங்கள் அங்கிருத்தல்.
2. “இது எங்களுக்கான இடம், எப்படி சட்டமன்றமும் நாடாளுமன்றமும் முக்கியமோ அப்படி கிராம சபையும் மிக முக்கியம். இங்கு கடந்த முறை நடந்த கிராம சபை இப்போது நடக்கவில்லை. அதை உடனடியாக நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை அந்த இடத்திலிருந்து வலியுறுத்துதல். FB Live மூலம் காணொளிகள் வெளியிடுதல்.
3. கவன ஈர்ப்பு நிகழ்வின் தொடர்ச்சியாக, உறுதி மொழி எடுத்துக்கொள்ளுதல். இந்திய அரசியலைப்பு சட்டத்தினை பாதுகாக்க உறுதி ஏற்பதோடு, அது வழங்கியுள்ள உள்ளாட்சி, கிராம சபை அதிகாரங்களை தொடர்ந்து பாதுகாப்போம் என்ற உறுதிமொழி எடுத்தல். இதில், அதிகபட்சம் மூன்று நபர்கள் கலந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘கிராம சபையை உடனடியாக நடத்துக!’