ETV Bharat / state

விக்கிரவாண்டியில் புகழேந்தி போட்டி: திமுக தலைமை அறிவிப்பு!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக புகழேந்தி என்பவர் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

புகழேந்தி
author img

By

Published : Sep 24, 2019, 11:53 AM IST

Updated : Sep 24, 2019, 12:00 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ராதாமணி. திமுகவைச் சேர்ந்தவரான இவர், கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

அதில், விழுப்புரம் மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி என்பவர் போட்டியிடுவார் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இவர் மூன்று முறை விக்கிரவாண்டி ஒன்றியத்தின் திமுக செயலாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

vikravandi by election dmk candidate

Conclusion:
Last Updated : Sep 24, 2019, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.