ETV Bharat / state

'அனைத்து நல்ல இயக்குநர் உடன் பணியாற்ற எனக்கு ஆசை' - கிச்சா சுதீப்

ராஜமௌலி மட்டும் அல்ல அனைத்து நல்ல இயக்குநர் உடன் பணியாற்ற தனக்கு ஆசை என கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்தார்.

author img

By

Published : Jul 24, 2022, 9:25 PM IST

கிச்சா சுதீப் நடிப்பில் விக்ராந்த் ரோணா திரைப்படம் ஜூலை 28 வெளியீடு

சென்னை: விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கன்னட நடிகர் கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீத்தா அசோக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில்: தமிழ்நாட்டில் நான் எப்போது வந்தாலும் எனக்கு நிறைய மரியாதை கொடுத்து என்னுடைய வேலையை பார்த்து ரசிக்கிறார்கள், அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லா மொழி படங்களும் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும். உங்களுடைய நடிகர்கள் அங்கு வந்து கன்னடம் பேசுகிறார்கள். கேட்க அழகாக உள்ளது. சினிமா என்பது ஒரு கதை அதை எல்லாருக்கும் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக இந்த படம் நல்ல படமாக இருக்கும். காசு இருக்கிறது என்பதற்காக ஒரு பெரிய படம் பண்ணலாம் என்று இதை எடுக்கவில்லை. இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது. இதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தான் இதை நாங்கள் எடுத்துள்ளோம்.

இப்பவும் இயக்குநர் இந்த படத்திற்காக வேலை செய்து வருகிறார். 3டியில் வேலை செய்வதால் அவரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் வருமானத்தை பொறுத்து வெற்றி அமையாது. மை டியர் குட்டி சாத்தான் கொடுத்த படத்தை வேறு எந்த படமும் கொடுக்க முடியாது. அது ஒரு வரலாறு அதை எங்களால் மாற்ற முடியாது. எல்லோருக்கும் ஒரு நேரம் வரும். அது போல கன்னட திரையுலகிற்கு இப்போது நேரம் வந்துள்ளது.

தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு நான் ஈ, படத்திற்கு பிறகு நீங்க ஹீரோவா இல்லை வில்லனா என்று தெரியவில்லை. உங்களை வைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என என்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர்கள் தெரிவித்தனர். அதனால் தான் தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை என்றார்.

புலி படத்தை பார்த்து விட்டு நீங்கள் தானே என்னை வீட்டிற்கு அனுப்புனீர்கள். குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அது இந்த படத்தில் உள்ளது. படங்களில் அதிக அளவில் வன்முறை இருப்பதை எங்கள் படத்தில் நாங்கள் குறைத்து கொள்வோம். மற்ற நடிகர்கள் படங்களை பற்றி நான் சொல்ல முடியாது. ராஜமௌலி மட்டும் அல்ல அனைத்து நல்ல இயக்குநர் உடன் பணியாற்ற எனக்கு ஆசை என்றார்.

இதையும் படிங்க:நேரலை: விஷாலின் ‘லத்தி’ திரைப்பட டீசர் வெளியீட்டு விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.