ETV Bharat / state

தேமுதிகவினர் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் - விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
author img

By

Published : Aug 14, 2021, 7:02 AM IST

சென்னை: தேமுதிகவினர் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தொண்டர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் போட்டியிட தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

குழப்பத்திற்கு இடமளிக்க கூடாது

வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முக்கியமான தேர்தலாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளில் கழக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள கழக தொண்டர்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:‘இன்றைய பட்ஜெட்டை டிமிக்கி கொடுக்கிற பட்ஜெட்’ - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.