ETV Bharat / state

தந்தை செய்துவந்த நற்பணிகளைத் தொடர்வேன் - விஜய் வசந்த் - tamilnadu latest news

சென்னை: தந்தை (மறைந்த வசந்தகுமார்) செய்துவந்த நற்பணிகளைத் தொடர்வேன் என விருப்பமனு தாக்கல்செய்த பின் அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் வசந்த்
விஜய் வசந்த்
author img

By

Published : Mar 5, 2021, 3:28 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு தாக்கல்செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கன்னியாகுமரி தொகுதி காங்கிரசின் கோட்டையாக உள்ளது. அங்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

தலைமை முடிவுக்காகக் காத்திருக்கிறேன். தொகுதி மக்களுக்கு தந்தை செய்துவந்த நற்பணிகளைத் தொடர்வேன். மக்களுக்கு எந்த நேரத்திலும் உறுதுணையாக இருப்பேன்" என்றார்.

இதுபோன்று அதே தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி சார்பில் கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல்செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல்: எம்ஜிஆரின் பேரன் நேர்காணலில் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.