ETV Bharat / state

நீண்ட நாட்களுக்குப்பிறகு விஜயகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படம் - விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் படம்

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியது.

மழை பிடிக்காத மனிதன்
மழை பிடிக்காத மனிதன்
author img

By

Published : Mar 14, 2022, 10:17 PM IST

சென்னை: விஜய் மில்டன் தமிழ்த்திரையுலகின் மிக வித்தியாசமான கதைக்கரு, ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைக்கதை, கண்களை கவரும் உருவாக்கம் ஆகியவற்றில் கைதேர்ந்தவர். இவரின் அடுத்த படைப்பான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B பங்கஜ் போரா மற்றும் இன்பினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் (Infiniti Film Ventures) சார்பில் S.விக்ரம் ஆகியோர் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனி, கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கேப்டன் விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பு வேடத்தில் இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்.

மழை பிடிக்காத மனிதன் டப்பிங் தொடக்கம்
மழை பிடிக்காத மனிதன் டப்பிங் தொடக்கம்

இப்படத்தின் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற தலைப்பு, படம் எப்படியானதாக இருக்கும் என்ற பெரும் ஆர்வத்தை பார்வையாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இத்தலைப்பு குறித்து இயக்குநர், பல்வேறு தொழில்களின் அடிப்படையில் மக்கள் மழையை ஒரு வரம் அல்லது சாபமாக உணர்கிறார்கள்.

ஆனால், இங்கே கதாநாயகன் ஒரு விதிவிலக்கானவன். மழையை விரும்பாததற்கு அவனுக்கு தகுந்த காரணமும் உள்ளது. ஆனால், அதற்கு பின்னணி கதை எதுவும் இல்லை. மழையுடன் தொடர்புடைய நினைவுகள் சில அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இறுதியில் இவையெல்லாவற்றிலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷின் கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இருக்காது. ஆனால், யதார்த்தமான பெண்ணின் சாயல்களைக் கொண்டிருக்கும்.

இப்படத்தின் பெரும்பகுதியை தியூ - தாமன் பகுதியில் படக்குழுவினர் எடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். கன்னடத் திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் தனஞ்செயா மற்றும் பிருத்வி அம்பர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். மற்ற நட்சத்திர நடிகர்கள் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி, இயக்குநர் ரமணா மற்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று (மார்ச் 14) தொடங்கியுள்ளது. போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும் - வர்ஷா பொல்லம்மா க்ளிக்ஸ்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.