சென்னை: மேற்கு தாம்பரம் அற்புதம் நகர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (27). இவர் விஜய் மக்கள் இயக்கம், தாம்பரம் 38 ஆவது வார்டு செயலாளராக இருந்தார். அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கருப்பசாமிக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரின் தாய் சின்னமா, கருப்பசாமியை மதுகுடிக்க வேண்டாம் என கண்டித்தார். அப்போது மதுபோதையில் இருந்த கருப்பசாமி சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
பின்பு அதே பகுதியில் உள்ள விநாயகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சரவணன் என்பவரிடம் லாரி ஓட்டுநராக வேலை பார்த்துக் கொண்டு, அங்குள்ள இடத்தில் தங்கி வந்தார். நேற்று (டிச.19) அதிக மதுபோதையில் கருப்பசாமி, அவரின் தாய் சின்னமாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போனை துண்டித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மா கருப்புசாமி தங்கிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற தாம்பரம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடந்த 15 மணிநேரத்தில் 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு