ETV Bharat / state

Vijay Antony Daughter Dead: விஜய் ஆண்டனி மகள் உடல் மாலை அடக்கம் - autopsy

Vijay Antony daughter died: இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், அவரின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்று, ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

விஜய் ஆண்டனி மகள் உடல் மாலை அடக்கம்
விஜய் ஆண்டனி மகள் உடல் மாலை அடக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 4:11 PM IST

விஜய் ஆண்டனி மகள் உடல் மாலை அடக்கம்

சென்னை: ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலை பகுதியில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு மீரா, லாரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் உறங்கச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இன்று (செப். 19) அதிகாலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது, அவர் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், வீட்டில் உள்ள பணியாளர் உதவியுடன் தனது மகளை மீட்டு, உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறி உள்ளனர். இது தொடர்பாக தேனாம்பேடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, உயிரிழந்த மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நேற்று (செப்.18) பள்ளி விடுமுறை நாள் என்பதால், மீரா அவரது தோழிகளை சந்திப்பதற்காக வெளியில் சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து உணவு அருந்தியதை அடுத்து, தனது படுக்கை அறைக்குச் சென்றவர், இன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும், மீரா கடந்த ஒரு வருட காலமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மன அழுத்தத்திற்கான ஆலோசனைகளையும், சிகிச்சையையும் எடுத்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைகள் கொடுத்த மருத்துவரிடமும், அவருடன் நேற்று வெளியே சென்ற தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், தடவியல் நிபுணர்கள் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, கைரேகை தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். இதனிடையே, மீராவின் உடலுக்கு உடற்கூறாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்று, ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மீராவின் உடல், அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், இன்று மாலையே கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடற்கூறு ஆய்வின்போது அவரது கழுத்தில் தூக்கு போட்டதற்கான தடயங்கள் மட்டுமே இருந்ததாகவும், உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது தற்கொலையாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் உறுதி செய்யப்படும் எனவும், அடுத்த கட்டமாக அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று விசாரணை செய்ய திட்டம் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TTF Vasan Arrest: நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.