இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "அரசு மேற்கொண்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குகிறேன். சிறு குறு தொழில் முனைவோர், கடனுக்கு ஊர்திகள் வாங்கியோருக்கு, மாதத் தவணை செலுத்தும் காலக்கெடுவை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகள் தட்டுப்பாடு நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வரும் நிலையில், அத்தகைய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரேஷன் அட்டைகள் இல்லாதவர்களுக்கும் மனிதாபிமானத்தோடு அரசாங்கம் நிவாரணப் பொருட்களையும், உதவித்தொகை வழங்க வேண்டும்.
கரோனா தொற்று நோய் பேரழிவில் இருந்து மனித இனத்தைக் காப்பதற்கு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதே முதன்மையான கடமை ஆகும்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் முடக்கத்தை வரவேற்கிறேன், கூடுதல் நடவடிக்கைகள் தேவை - மோடிக்கு சோனியா கடிதம்