ETV Bharat / state

"நானே ஓசி குடி.. ஃபைன் எல்லாம் கட்ட முடியாது" - போலீசிடம் வம்பிழுத்த டிப்டாப் பெண் வீடியோ! - kudikara pengal video

நானே ஓசி குடி எனவும், என்னிடம் காசு இல்லை எனவும் குடிபோதையில் வந்த இளம்பெண் போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நானே ஓசி குடி..’ - குடிமகளின் வைரல் வீடியோ!

author img

By

Published : Jan 5, 2023, 2:31 PM IST

குடிபோதையில் வந்த இளம்பெண் போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ

சென்னை: கடந்த சில தினங்களாக, ‘எதற்காக ஃபைன் (fine) போட்டீர்கள்? என்னிடம் காசு இல்லை. என்னால் கட்ட முடியாது. தினமும் குடித்துவிட்டுதான் செல்கிறேன் அப்போது ஃபைன் போடவில்லை. இப்போது ஏன் போடுகிறீர்கள்? நானே ஓசி குடிதான். என்னால் எப்படி ஃபைன் கட்ட முடியும்?” என மது அருந்திய இளம்பெண் ஒருவர் போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இந்த வீடியோ புத்தாண்டு தினத்தன்று எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அருகே புத்தாண்டு தினத்தன்று இரவு போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக குடிபோதையில் பைக்கில் வந்த இளம்பெண் ஒருவரை போக்குவரத்து காவல் துறையினர் நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த இளம்பெண், போக்குவரத்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பணம் இல்லாததால் வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், அப்பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுதொடர்பாக விசாரிக்கையில், குடிபோதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வேளச்சேரியை சேர்ந்த மீனா என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: Video: குத்துன்னா இப்படியிருக்கணும் - ஆம்புலன்ஸ் முன் குத்தாட்டம் போட்ட பெண்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.