ETV Bharat / state

'விகிதாசாரப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இடம் வழங்குக!' - வேல்முருகன்

சென்னை: விகிதாசாரப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : May 15, 2020, 9:54 PM IST

velmurugan slams central government for medical reservation

இதுகுறித்து வேல்முருகன் கூறியதாவது, 'மைக்ரோ சிறுபான்மை உயர் வகுப்பினர் தவிர, பெரும்பான்மை பிற்படுத்தப்பட்டோருக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை அபகரித்து, நீட் நுழைவுத்தேர்வை மோடி அரசு திணித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி, மலைவாசி, ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை மறுத்தும், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் முடித்த பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு முதுநிலை மருத்துவம், படிக்க இடம் கிடையாது என்கிறார்.

இத்தனைக்கும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு ஒன்றியத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்கிறார், மோடி.

ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 371 இடங்களே ஒதுக்கப்பட்டு, உயர் வகுப்பினருக்கு 635 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடங்களை மோடி அரசு, சிதைத்து சமூக நீதியைப் புதைக்க குழி தோண்டியிருக்கிறார்.

பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லிக்கொள்ளும் மோடியே நாட்டின் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்கு விரோதமாக ஏன் செயல்படுகிறார்?

மைக்ரோ சிறுபான்மை உயர்வகுப்பினர் தவிர, பெரும்பான்மை பிற்படுத்தப்பட்டோருக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடமில்லை என்னும் மோடி அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, விகிதாசாரப்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடம் வழங்கவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.