ETV Bharat / state

பாமகவை எதிர்த்து யாரையும் அரசியல் செய்ய விடமாட்டார்கள்: வேல்முருகன் பகிரங்க குற்றச்சாட்டு!

சென்னை: பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை எதிர்த்து வடமாவட்டங்களில் யாரையும் அரசியல் செய்ய விடமாட்டார்கள் என்று வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேல்முருகன் பிரஸ் மீட்
author img

By

Published : Apr 13, 2019, 11:34 PM IST

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பா.ஜ.க - அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி தோல்வியைத் தழுவும். எனக்கு பாதுகாப்பு அளிக்ககோரி டிஜிபி, தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எங்களின் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பாமக மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம் மற்றும் அதிமுக சுரேஷ் ஆகியோர் என்னுடைய கட்சியைச் சேர்ந்த அரியலூர் மாவட்ட செயலாளர் சம்பத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

வேல்முருகனை கொலை செய்ய வேண்டும். யார் யார் எவ்வளவு தருகிறீர்கள் என்று ஒரு பாமக கூட்டத்தில் கேட்கின்றனர். வன்னியர் சங்க உறுப்பினர் ஒருவர் எழுந்து பத்தாயிரம் தருகிறேன் என்கிறார். அந்த கூட்டத்தில் 74 ஆயிரம் ரூபாய் பணம் வசூலாகியுள்ளது. இதை வார இதழ் பத்திரிகைகள் வீடியோவாக வெளியிட்டது. வடதமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வேல்முருகன் வாக்கு சேகரிக்க வந்தால் கொலை செய்யப்படுவார் என்று பாமகவினர் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் பிள்ளாயார்குப்பம் ஒன்றியச் செயலாளர் சரவணன் தலை வெட்டி வீசப்படும் என்று முகநூலில் பதிவிடுகின்றனர். தருமபுரிக்கு வந்தால் வேல்முருகன் உயிரோடு திரும்ப முடியாது. எங்க சின்ன ஐயாவுக்கு எதிராக வாக்கு சேகரிக்க வந்தால் கொலை செய்வோம் என்று மிரட்டல் வருகின்றது. தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி தராமல் சூழ்ச்சி செய்கின்றனர். மோடிக்கு எடுபிடி செய்கின்ற அரசுக்கு தேர்தல் ஆணையமும் எடுபிடியாக செயல்படுகின்றது. எல்லா கட்சியினரின் கொடிக்கும் அனுமதி தரப்படுகின்றது. ஆனால், வேல்முருகன் கட்சி கொடி என்றால் மட்டும் இலுப்பை காய் போல் இருக்கிறதா..? இது போல் ஜனநாயக உரிமையை பறித்து ஒரு தலை பட்சமான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு

பாமக, அதிமுகவின் பூச்சாண்டிக்கு நான் பயப்படமாட்டேன். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. நான் பனங்காட்டு நரி அல்ல.. பனங்காட்டு புலி. பாமகவிலிருந்து விலகிய நாள் முதல் என் வாகனத்தை தாக்குவது, என் கட்சியினரைத் தாக்குவது என தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாமக, வன்னியர் சங்கத்தை எதிர்த்து யாரையும் அரசியல் செய்ய விட மாட்டார்கள். அரியலூரில் நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனக்கும், என் கட்சியினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

”40 தொகுதியில் பா.ஜ.க. அ.தி.மு.க. பா.ம.க கூட்டணி தோல்வியை தழுவவுள்ளது. எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று டிஜிபி, தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.எங்களின் கூட்டணியில் இருக்கும் பல கட்சியை சார்ந்த தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. 

பா.ம.க மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம் மற்றும் அ.தி.மு.க சுரேஷ் ஆகியோர் எங்கள் அரியலூர் மாவட்ட செயலாளர் சம்பத் அவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

வேல்முருகனை கொலை செய்ய வேண்டும் யார் யார் எவ்வளவு தருகின்றனர் என்று ஒரு கூட்டத்தில் கேட்கின்றனர். வன்னியர் சங்க உறுப்பினர் ஒருவர் எழுந்து பத்தாயிரம் தருகிறேன் என்றார். அந்த கூட்டத்தில் 74 ஆயிரம் ரூபாய் பணம் வசூலாகிறது. இதை வார இதழ் பத்திரிகைகள் வீடியோவாக வெளியிட்டது. 

வடதமிழகத்தில் தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவித்து வேல்முருகன் வாக்கு சேகரிக்க வந்தால் கொலை செய்யப்படுவார் என்று பா.ம.க கட்சியினர் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் பிள்ளாயார்குப்பம் ஒன்றியச் செயலாளர் சரவணன் தலை வெட்டி வீசப்படும் என்று முகநூலில் பதிவிடுகின்றனர்.

வேல்முருகன் எப்போதும் தமிழக அரசுக்கு பிரச்னை தான். எனவே அவர் இருக்கக்கூடாது என்று ஆட்சி செய்பவர்கள் பாதுகாப்பு அளிக்க மறுக்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது எனக்கு அங்கு செல்ல அனுமதி தராமல் கைது செய்தனர். கைது செய்து உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்டுவம் அளித்தனர். அதிலிருந்து தற்போது வரை மாத மாதம் மருத்துவமனி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மெதுவாக குரல்வளத்தை இழக்கின்ற மருந்தை கொடுத்துள்ளனர். இதையே திருமுருகன் காந்திக்கும் செய்துள்ளனர். இதை அவர்தான் கூறினார்.

தருமபுரிக்கு வந்தால் வேல்முருகன் உயிரோடு திரும்ப முடியாது. எங்க சின்ன ஐயாவுக்கு எதிராக வாக்கு சேகரிக்க வந்தால் கொலை செய்வோம் என்று மிரட்டல் வருகின்றது.

தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி தராமல்  சூழ்ச்சி செய்து எங்கள் கட்சியினரை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்துள்ளது. மோடிக்கு எடுபிடி செய்கின்ற அரசுக்கு தேர்தல் ஆணையம் எடுபிடியாக் செயல்படுகின்றது.

எல்லா கட்சியினரின் கொடிக்கும் அனுமதி தரப்படுகின்றது. ஆனால் வேல்முருகன் கட்சி கோடி என்றல் மட்டும் இலுப்பை காய் போல் இருக்கிறதா.

இது போல் ஜனநாயக உரிமையை பறித்து ஒரு தலை பட்சமான நடவடிக்கையை தேர்தல் ஆனையம் மேற்கொண்டு வருகிறது. 

பா.ம.க., அ.தி.மு.க. பூச்சாண்டிக்கு நான் பயப்படமாட்டேன். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. நான் பனங்காட்டு நரி அல்ல பனங்காட்டு புலி.

பா.ம.க. விலிருந்து விலகிய நாள் முதல் என் வாகனத்தை தாக்குவது, என் கட்சியினரை தாக்குவது என தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பா.ம.க., வன்னியர் சங்கத்தை எதிர்த்து யாரையும் அரசியல் செய்ய விட மாட்டார்கள்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பதை போல கலைஞர், ஜெயலலிதாவுக்கு தெரியும் வேல்முருகனைப் பற்றி இன்று இருக்கும் எடப்பாடிகளுக்கு தெரியாது.

அரியலூரில் நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனக்கும், என் கட்சியினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.