கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், காய்கறி விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. வெளிச் சந்தைகளில் காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள், சென்னை வராததால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இன்றைய காய்கறிகள் விலை (கிலோ ஒன்றுக்கு) நிலவரம் பின்வருமாறு:
தக்காளி, முட்டைக்கோஸ் - 20 ரூபாய்
அவரைக்காய், பீட்ரூட், வெண்டைக்காய், பாகற்காய், சௌசௌ - 30 ரூபாய்
முருங்கைக்காய், கேரட் - 40 ரூபாய்
உருளைக்கிழங்கு - 50 ரூபாய்
கத்தரிக்காய், பீர்க்கங்காய் - 60 ரூபாய்
சாம்பார் வெங்காயம் - 30 ரூபாய்
பெரிய வெங்காயம் - 75 ரூபாய்
பீன்ஸ் - 90 ரூபாய்
சென்னையின் சில்லறை விற்பனைக் கடைகளில் காய்கறிகளின் விலை இதைவிட சற்று அதிகமாகவே உள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்'