விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை கண்காணிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே, பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் ஆயுதங்களை வைத்து கொள்வதை சட்டபூர்வமாக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.
பெண்கள் மீது தொடுக்கின்ற தாக்குதல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அதற்கு தகுந்த சட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான திருத்தங்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மேற்கொள்வதுடன், பெண்கள் தமது பாதுகாப்பிற்காக வைத்து கொள்ளக் கூடிய ஆயுதங்களை அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம். மேலும்
கச்சத்தீவு மீட்பு, ஊழல் ஒழிப்பு, நீட் தேர்வு ரத்து, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.