சென்னை: Governor Ravi Customary Address: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜன.5) ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.
இதில் திமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக, விசிக, பாஜக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து, ஆளுநர் உரையைப் புறக்கணித்து விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய விசிக காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச்செல்வன், "நாட்டில் கரோனாவை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதா இந்நேரம் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது தமிழ்நாடு மக்களுக்கு எதிரானது.
தமிழ்நாடு மக்களின் மனதை காயப்படுத்தும் ஆளுநரின் இந்தப் போக்கை கண்டித்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்" என்று கூறினார்.
முன்னதாக ஆளுநர் உரையைப் புறக்கணித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: நாளை முன்ஜாமீன் மனு விசாரணை; ராஜேந்திர பாலாஜி இன்று கைது