ETV Bharat / state

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டி கொலை! - death near Darapakkam Chennai

குன்றத்தூர் அருகே குடும்பத் தகராறில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரை அவரது சகோதரரின் மகன்கள் இருவர் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 25, 2023, 4:14 PM IST

சென்னை: சென்னை அருகே குடும்பத் தகராறில் சித்தப்பாவை, அண்ணன் தம்பிகள் இணைந்து திட்டமிட்டு படுகொலை செய்த சம்பவம் குன்றத்தூர் தாரப்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டவர் விசிக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

குன்றத்தூர் அடுத்த தாரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதிஷ்(29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், இவரது அண்ணன் மகன்களான சுகாஷ்(25), சுனில்(22) ஆகிய இருவரும் அதிஷிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த தகராறு முற்றிய நிலையில், சகோதரர்களான சுகாஷ், சுனில் ஆகிய இருவரும் அதிஷை தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனைத் தடுக்க முயன்ற அதிஷின் அண்ணன்களான முரளி(33), சுகுமார்(38) உள்ளிட்டோர்களுக்கும் பயங்கர வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர்கள் படுகாயங்களுடன் அவர்களை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், படுகாயமடைந்த அதிஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயங்களுடன் மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாகிய சுகாஷ், சுனில் ஆகியோர் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவர்களை வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சித்தப்பாவை அவரது, அண்ணன் மகன்கள் இருவரும் திட்டமிட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 7 பேர்; நையப்புடைத்த பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.