ETV Bharat / state

வசந்த் & கோ நிறுவனம் சார்பாக ரூ.25 லட்சம் நிதி - udhayanidhi stalin

கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ சார்பாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

vasanth-and-co-donated-25-lakh-to-cm-relief-fund

author img

By

Published : May 17, 2021, 10:43 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் & கோ நிறுவனம் சார்பாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் 25 லட்சம் ரூபாய் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து இதற்கான காசோலையை வழங்கினார். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விஜய் வசந்த்தின் சகோதரர் வினோத் குமார், சகோதரி தங்கமலர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரணநிதி: நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.