ETV Bharat / state

பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்! - வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டு கூட்டம்
அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டு கூட்டம்
author img

By

Published : Jan 10, 2020, 1:45 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகைதரும் பார்வையாளர்களைக் கவர்வதற்காக பூங்கா நிர்வாகம் செய்திருக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யோகோஷ் சிங் உள்ளிட்டோர் உதவி இயக்குநர், பிற துறை அலுவலர்களுடன் கூட்டு கூட்டம் நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்கா நிர்வாகம் பல முன்னேற்பாடுகள் மேற்கொண்டுள்ளது.

அதன் விவரங்கள்:

1. வரும் 14ஆம் தேதியன்று (செவ்வாய்) வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும்.

2. ஜனவரி 15, 16, 17 ஆகிய நாள்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை பூங்கா திறந்திருக்கும்.

3. பார்வையாளர்களின் வசதிக்காக இருபது நுழைவுச்சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

4. இணையதளம் மூலமாக (www.aazp.in), vandalur zoo செயலி (mobile app) மூலமாகவும் நுழைவுசீட்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். இவர்களுக்கென்று 14.01.2020 முதல் 17.01.2020 வரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒரு சிறப்பு கவுண்டர் அமைக்கப்படும்.

5. பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ மூலமாகவும் கட்டணத் தொகையினை செலுத்தும் வசதி உள்ளது.

6. பூங்காவினுள் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக பல இடங்களில் சிறப்புக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்.

7. பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக கேளம்பாக்கம் சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் தனித்தனியே அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா புனர்வாழ்வு மையம் அருகில் அமைக்கப்பட்டுள்ளன.

8. வாகன நிறுத்துமிடங்களிலிருந்து பூங்காவிற்கு வந்து செல்ல இலவச பேருந்து வசதி வரும் 15ஆம் தேதிமுதல் 17ஆம் தேதிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. வண்டலூர் பூங்காவிற்கு வருகைதரும் பார்வையாளர்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் பிராட்வே, மெரினா பீச், கோயம்பேடு, வடபழனி, தி. நகர், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, ஆவடி, சோழிங்கநல்லூர், பூந்தமல்லி, திருப்போரூர், மாமல்லபுரம், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலிருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

10. பார்வையாளர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கூடுதல் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.

11. பார்வையாளர்கள் வசதிக்காக பூங்காவினுள் மருத்துவ முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

12. பூங்காவிற்கு வரும் தாய்மார்கள் குழுந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு எனப் பூங்காவில் இரண்டு இடங்களில் தாய்மார்கள் பாலூட்டு அறை வசதிகள் உள்ளன.

13. பூங்காவிற்கு வருகைதரும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கையில் அடையாள சீட்டு (டேக்) கட்டும்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

14. பொங்கல் பண்டிகையின்போது பார்வையாளர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாநகர போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம் ஆகிய துறைகள் மூலம் பூங்கா நிர்வாகம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

15. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தடைசெய்யப்பட்ட நெகிழிகளைப் பார்வையாளர்கள் பூங்காவிற்கு எடுத்துவர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டு கூட்டம்

16. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு, ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட நெகிழிகளைப் பூங்காவினுள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. எனவே பார்வையாளர்கள் அவற்றை பூங்காவிற்கு கொண்டுவராமல் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: காட்டேரி பூங்காவிற்கு குவியும் புகைப்படக் கலைஞர்கள்

Intro:Body:

Vandalur Zoo Pongal arrangements

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.