ETV Bharat / state

விடைத்தாள் திருத்தும் பணி - ஜூலை மாதம் நடத்த கோரிக்கை - work request to hold in july

சென்னை: 11, 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை ஜூலை மாதம் நடத்த அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்

author img

By

Published : May 24, 2020, 3:31 PM IST

தமிழ்நாட்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியினை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "11, 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியினை கரோனா வைரஸின் தீவிரப் பரவலைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மத்திய அரசின் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நீட் நுழைவுத் தேர்வு போன்றவை ஜூலை மாதம் நடக்க உள்ளது.

கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்க இருக்கிறது. எனவே, போதிய கால அவகாசம் இல்லாததால், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 11, 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியினை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய செயலி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.