சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக, காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
இதையடுத்து, ரஜினிகாந்த் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து இன்று (அக்.31) தனது ட்விட்டர் பக்கத்தில், ”காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் ரஜினியின் நலம் குறித்து கேட்டேன்.
-
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
— வைரமுத்து (@Vairamuthu) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன். pic.twitter.com/pB9zjj9vSO
">காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
— வைரமுத்து (@Vairamuthu) October 31, 2021
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன். pic.twitter.com/pB9zjj9vSOகாவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
— வைரமுத்து (@Vairamuthu) October 31, 2021
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன். pic.twitter.com/pB9zjj9vSO
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ரஜினிகாந்த் உடல்நிலை: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்!