மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அழைத்து வருகின்றனர். இதற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசு என்று கூறுவது குறித்து கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள ட்விட்டர் பதிவில்,“ஒன்று + இயம் = ஒன்றியம் ஒன்று என்ற சொல்லுக்கு ஒற்றுமை என்று பொருள் தருகிறது தமிழ் லெக்சிகன். இயம் என்பது இயங்குதலாகிய வினை எனலாம். ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் இயங்குவது ஒன்றியம். இதில் என்ன பிழை? எதிர்க்கருத்துக்கு ஏது இடம்?” என கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு' எனும் சொல்லாடலைத் தான் தொடர்ந்து பயன்படுத்துவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்