முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய வைரமுத்து, "ஓய்வறியா சூரியன் ஓய்விலிருக்கும் இடத்தில் நாம் நிற்கிறோம். சமூகநீதி நிலைபெற்றதற்கு காரணம் கருணாநிதி. 50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்து கட்டிக்காத்து அவரின் மகன் ஸ்டாலின் கையில் கொடுத்துச் சென்றுள்ளார்.
- ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன்...
எம்ஜிஆர் கழகத்தை விட்டுச் சென்றது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதுண்டா என அவரிடம் கேட்டேன். சற்று அமைதி காத்தவர் (கருணாநிதி) ஒரு வகையில் நல்லது எனத் தெரிவித்தார், இல்லையேல் திராவிடத்திற்கு எதிரான சக்தி வந்திருக்கும் என்றார்.
தமிழ்நாட்டை மேம்படுத்த திராவிடத்தைக் காக்க ஒன்றுபட வேண்டிய நேரமிது. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைய வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கருணாநிதி நினைவுநாள்: நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி