நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதற்கு முன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கர்நாடக அரசு, தென்பெண்ணையில் அணைகட்டும் பணியினை 70விழுக்காடு முடித்துவிட்டது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசின் இந்தச்செயலையடுத்து தீர்ப்பாயத்தை ஏன் அமைக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசை அணுகாததன் காரணம் என்ன? என்று கேட்டதற்கு இன்று வரை பதிலில்லை.
நீர் மேலாண்மை விஷயத்தில் தமிழ்நாடு அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பதில் சொல்லமுடியாத முதலமைச்சர், உள்ளாட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்தவிடமால் தடுக்கிறார் என்று கூறுகிறார்.
உள்ளாட்சித்தேர்தலை நிறுத்த அதிமுக வேண்டுமானால் முயற்சி செய்யும். ஆனால், திமுக அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. உள்ளாட்சித்தேர்தலில் திமுக - மதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பி.எஸ். கிருஷ்ணனின் மறைவு பட்டியிலின மக்களுக்கு பேரிழப்பு’ - திருமாவளவன்