இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து உரிமையை, பேச்சு உரிமையை யாராலும் தடுக்க முடியாது. மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களாலும் முடியவில்லை. நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்ற அச்சத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இத்தகைய அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது, எதிர்க்கட்சிகளின் கடமை. அதற்காக, பொதுமக்களைச் சந்திக்கும்போது பாதுகாப்பு வழங்கவேண்டுமே தவிர, சந்திக்க விடாமல் தடுக்க, எந்த அதிகாரமும் இல்லை. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.” எனத் தெரிவித்துள்ளார்.