ETV Bharat / state

’பஹ்ரைனுக்கு விமானம் இயக்க ஏற்பாடு’ - வைகோவிடம் உறுதியளித்த அமைச்சர் - vaiko news

சென்னையிலிருந்து பஹ்ரைனுக்கு விமானம் இயக்க வைகோ வைத்த கோரிக்கையை அடுத்து அவருடன் செல்போனில் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமானம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

வைகோ  பஹ்ரைனுக்கு விமான ஏற்பாடு  மதிமுக  மதிமுக அறிக்கை  வைகோ செய்திகள்  vaiko news  mdmk news
பஹ்ரைனுக்கு விமானம் ஏற்பாடு; வைகோவிடம் அமைச்சர் உறுதி
author img

By

Published : Aug 16, 2020, 3:15 AM IST

இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வளைகுடா நாடுகளில் இருக்கின்ற இந்தியர்களை மீட்டு வருவதற்கு விமானங்கள் அறிவிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதுவும், சென்னைக்குக் குறைந்த அளவிலேயே வருகின்றன. அதுபோல், கடந்த நான்கு மாதங்களாக, சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானம் இல்லை.

குறிப்பாக, பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த, அங்கே பணிபுரிகின்ற 800க்கும் மேற்பட்டவர்கள், சென்னையில் இருக்கின்றனர். அவர்களுள் பலரது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. எனவே, அவர்கள் பஹ்ரைன் திரும்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். சென்னையில் இருந்து விமானத்தை இயக்குவதாக, கல்ஃப் ஏர் விமான நிறுவனம், பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதுகுறித்து, பஹ்ரைன் வாழ் தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கும் கடந்த வியாழக்கிழமை (ஆக.13) மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, அலைபேசியில் வைகோவிடம் பேசினார். அப்போது வைகோ நிலைமையை எடுத்துக்கூறினார். அதற்கு அமைச்சர், விரைவில், பஹ்ரைன் நாட்டுக்கு விமானம் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பெண்களுக்குச் சொத்து உரிமை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.