ETV Bharat / state

‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம் - மதிமுக வைகோ

சென்னை: எரிமலை ஓரத்தில் பிரதமர் மோடி மகுடி வாசிக்கிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

Vaiko - MDMK
Vaiko - MDMK
author img

By

Published : Feb 20, 2020, 8:03 PM IST

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு கோடியே ஐந்து லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். எரிமலையின் ஓரத்தில் உட்கார்ந்து மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார் மோடி. எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது.

வைகோ செய்தியாளர் சந்திப்பு

சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டனர். சாலையில் கிடந்த பொருள்களையும் அப்புறப்படுத்திவிட்டுச் சென்றனர். மக்கள் மனதில் இஸ்லாமிய மக்களின் கோரிக்கை நியாயமானதாக உள்ளது.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என அனைத்து தரப்பினரும் இஸ்லாமியர்களுடன் சகோதர்களாகதான் இருப்பார்கள்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.