ETV Bharat / state

பெல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வைகோ வலியுறுத்தல் - ஆக்சிஜன் பற்றாக்குறையை

ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திருச்சி பெல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Vaiko insists govt on producing oxygen at the Trichy BHEL Plant

author img

By

Published : Apr 28, 2021, 4:24 PM IST

சென்னை: நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தூத்துகுடியில் மூடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் ஆக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்கே, எட்டு மணி நேரத்தில், 150 உருளைகள் ஆக்சிஜன் ஆக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலை நேரங்களில் குறைந்தது 400 உருளைகள் ஆக்சிஜன் ஆக்க முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு, திருச்சி பெல் ஆலையில், ஆக்சிஜன் ஆக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.