ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஆஜரான பின்னர், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு மோசடி நாடகமாடி உள்ளது. மத்திய அரசு தமிழ்நாடு அரசை கால்மிதி போல் பயன்படுத்தி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் எடப்பாடி அரசும் கொத்தடிமை அரசாக செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும், தமிழ்நாடு மக்களை கிள்ளுக்கீரை என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் கிராமப்புற மக்கள் அதிக பணம் செலவழித்து நீட் பயிற்சி பெற முடியாது. நம் தலையில் கல்லை போட்டுவிட்டனர். முழுக்க முழுக்க மத்திய சர்க்கார் தமிழ்நாட்டை ஒரு வழி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சமூகநீதியை அளிக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. இங்குள்ள அரசுக்கு முதுகெலும்பே கிடையாது, முதுகெலும்பில்லாத கோழைத்தனமான அரசு தற்போதைய எடப்பாடி அரசு. இந்த அரசு இருக்கின்றவரை தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு என்றும் பேசினார்.