சென்னை:சென்னையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளமாறன் சந்தித்து இன்று (ஆக.9) மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஐந்து பாடங்களை நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் நடத்தப்படாத நிலையில், மாணவர்களுக்கு எழுத்துக்கள் மறந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து, தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை வகுப்புகளை நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணி நியமனம் வழங்க வேண்டும். பள்ளிகளில் கழிவறைகளை பராமரிக்க, துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மோசமான நிலையில் வருவாய் பற்றாக்குறை- நிதியமைச்சர் தகவல்