ETV Bharat / state

குடிமைப் பணிகளுக்கான பயிற்சியில் சேர்வதற்கான முதல்நிலைத் தேர்வு - குடிமைப் பணிகளுக்கான பயிற்சித் தேர்வு

குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ்) 2022ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

குடிமைப் பணிகளுக்கான பயிற்சியில்  சேர்வதற்கான முதல்நிலைத் தேர்வு

author img

By

Published : Feb 27, 2022, 7:21 PM IST

சென்னை: குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ்) 2022ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

குடிமைப் பணி முதல்நிலைத் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித்தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று (27.2.2022) தமிழ்நாட்டிலுள்ள 18 மையங்களில், கரோனா தொடர்பாக அரசு வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது.

குடிமைப் பணிகளுக்கான பயிற்சியில் சேர்வதற்கான முதல்நிலைத் தேர்வு

இத்தேர்வில், கூடுதலாக வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்காக கூடுதலாக 30 நிமிட நேரம் வழங்கப்பட்டு, மொத்தத் தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதச் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

சென்னையில் தேர்வு நடத்தப்பட்ட மையங்களில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நேரில் சென்று பார்வையிட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜெயசீலன், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அலுவலர்களும் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:வந்தது மூன்றாவது விமானம்: உக்ரைனில் இருந்து 240 மாணவர்கள் நாடு திரும்பினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.