ETV Bharat / state

மத்திய அமைச்சர் ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்து பேச்சு - hockey Ground Opening at Porur

சென்னை: ஒலிம்பிக் ஹாக்கி போட்டி தகுதி தேர்வில் ஆடவர், பெண்கள் அணியினர் தகுதி பெறுவார்கள் என போரூரில் ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தபின், மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

Union Minister Kiran Rijiju participates hockey program in chennai, ஹாக்கி மைதானத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்து நம்பிக்கை
author img

By

Published : Oct 30, 2019, 4:08 PM IST

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுகளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஹாக்கி வீரர்களுடன் விளையாடி கோல் போட்டு அசத்தினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியவதாவது, இந்த மைதானத்தை பார்க்கும்போது, இங்கிருந்து ஒரு ஒலிம்பிக் வீரர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நாட்டின் ஒற்றுமையை உருவாக்குவது விளையாட்டுதான். விளையாட்டை வளர்க்க வேண்டுமென்றால் முதலில் வீரர்களை மதிக்க வேண்டும். ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுபோல், அதில் பங்கு பெற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நாட்டுக்காக விளையாடுபவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும், இந்தியாவுக்காக விளையாடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்னை அணுகலாம் என தெரிவித்தார்.

Union Minister Kiran Rijiju participates hockey program in chennai, ஹாக்கி மைதானத்தை மத்திய அமைச்சர் திறந்து வைத்து நம்பிக்கை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிச்சயம் 2028 ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம்பெறும். விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு அரசு கொடுக்கும் நிதி தாமதமாகக் கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய மத்திய அரசு அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் நிதிகொடுக்க வழிவகை செய்துள்ளது. தமிழ் நாடு பாரம்பரிய விளையாட்டுகள் கலாச்சாரம் கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஹாக்கி போட்டி தகுதி தேர்வில் ஆடவர் மற்றும் பெண்கள் அணியினர் தகுதி பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க:
விளையாட்டு அரசியலால் நானும் பாதிக்கப்பட்டேன்’- கூடைப்பந்து வீராங்கனை பிரியதர்ஷினி!

Intro:ஒலிம்பிற்கான ஆக்கி போட்டி தகுதி தேர்வில் ஆடவர் மற்றும் பெண்கள் என இரு அணிகளும் தகுதி பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளது போரூரில் ஹாக்கி மைதானத்தை திறந்துவைத்தபின் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரஜிஜு பேட்டி
Body:சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுகளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது இதனை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ கலந்து கொண்டு பார்வையிட்டு தொடங்கி வைத்தார் பின்னர் ஹாக்கி விளையாட்டு வீரர்களிடம் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் ஹாக்கி விளையாட்டை விளையாடி கோல் போட்ட்டு அசத்தினார். இதையடுத்து முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்பேசுகையில் :

இந்த மையத்தை பார்க்கும்போது இங்கிருந்து ஒரு ஒலிம்பிக் வீரர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.நாட்டின் ஒற்றுமையை உருவாக்குவது விளையாட்டுதான்.விளையாட்டை வளர்க்க வேண்டுமென்றால் முதலில் வீரர்களை மதிக்க வேண்டும் மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கும் வேலை கொடுப்பது போல் அதில் பங்கு பெற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.நாட்டுக்காக விளையாடுபவர்கள் கவுரவிக்கபட வேண்டும் இந்தியாவுக்காக விளையாடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்னை அணுகலாம் என தெரிவித்தார்.
Conclusion:பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது எனினும் இந்த முறை சிறந்த திறமையை வெளிப்படுத்துவோம்.வரும் . 2024 ஒலிம்பிக்கில் இரட்டை இலக்க பதக்கம் பெற முயற்சிகள் எடுக்கப்படும் ஆனால் நிச்சயம 2028 ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம்பெறும் என உறுதியளித்தார்.

விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு அரசு கொடுக்கும் நிதி தாமதமாக கிடைக்கும் நிலையில் இருந்தது இந்த அரசு அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாரம்பரிய விளையாட்டுகள் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்திற்கென்று பாரம்பரிய விளையாட்டு கலாச்சாரம் கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது.ஒலிம்பிகில் இருக்கும் விளையாட்டுகள் மட்டுமின்றி பாரம்பரிய கலாச்சார விளையாட்டுகளும் ஊக்குவிக்கப்படும்.இதன் மூலம் வரும் காலங்களில் விளையாட்டுதுறையில் திறமையான வீரர்கள் தமிழகத்தில் இருந்து வருவார்கள் என கூறியுள்ளார்

நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஒலிம்பிற்கான ஆக்கி போட்டி தகுதி தேர்வில் ஆடவர் மற்றும் பெண்கள் என இரு அணிகளும் தகுதி பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.