ETV Bharat / state

’அரசியல் நோக்கங்களுக்காக செயல்படும் கட்சியில் இருக்க முடியாது’ - மக்கள் நீதி மய்யத்தைத் தாக்கும் அருணாச்சலம்

சென்னை : விவசாயிகளுக்கு பயனளிக்கும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாளிக்காத கட்சியில் தன்னால் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியாததால் பாஜகவில் தான் இணைந்ததாக, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
author img

By

Published : Dec 25, 2020, 12:23 PM IST

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், பாமக செய்திப் பிரிவை சேர்ந்த சோழ குமார வாண்டையார் ஆகியோர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "வாஜ்பாய் இருந்த காலத்தில் பல இளைஞர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். அதேபோல் அவரது பிறந்த நாளான இன்று பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த அருணாச்சலம் இதுகுறித்து கூறும்போது, "தொலைநோக்கு சிந்தனையோடு, மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளது. விவசாயத்தை பூர்வீகமாகக் கொண்டவன் என்கிற அடிப்படையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் சட்டங்களுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் இந்தச் சட்டத்தை ஆதரிக்காமல், அரசியல் நோக்கங்களுக்காக செயல்படும் கட்சியில் (மநீம) என்னால் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியில் வகித்து வந்த பொறுப்புகளை உதறிவிட்டு, பாஜகவில் ஒரு தொண்டனாக வந்து இணைந்துள்ளேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: நல்லாட்சி நாள் இன்று: 'அடல் பிஹாரி வாஜ்பாய்' புத்தகத்தை வெளியிடும் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.