சென்னை அண்ணாநகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தாண்டமுத்து என்பவர், தனது ஆட்டோ உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக நேற்று (ஆகஸ்ட் 8) சென்றுள்ளார். அங்கு, அவருக்கு பல காரணங்களைச் சொல்லி, அலுவலர்கள் உரிமத்தைப் புதுப்பித்துத் தரவில்லை.
உடனே, "வருமானமில்லை. இன்சூரன்ஸ் கட்டமுடியவில்லை. கும்பிடுகிறேன். ஆட்டோவின் உரிமத்தைப் புதுப்பித்துத் தாருங்கள்" என தாண்டமுத்து கெஞ்சியுள்ளார்.
இருந்தபோதிலும், அலுவலர்கள் அலைக்கழித்ததால் மனவிரக்தியில் இருந்த தாண்டமுத்து, தனது ஆட்டோவிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். மேலும், தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கும்போது அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்தனர்.
இதனையறிந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாண்டமுத்துவை தனது இல்லத்திற்கு இன்று (ஆகஸ்ட் 9) வரவழைத்து, அவருக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கினார்.