ETV Bharat / state

அண்ணா பல்கலை., ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக திமுக இளைஞரணி செயலரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி
உதயநிதி
author img

By

Published : Sep 13, 2021, 3:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்றக் குழு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக திமுக இளைஞரணி செயலரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி
உதயநிதி

சென்னை பல்கலைக்கழகத்துக்கு வெற்றியழகன், வி.ஜி.ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் மூர்த்தி, செந்தில் குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தனைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி இயல் பல்கலைக்கழகத்துக்கு ஜவாஹிருல்லா, வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு மணிகண்ணன், ஜெயலலிதா, மீன்வள பல்கலைக்கழகத்துக்கு நாகை மாலி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ஜி.கேஜி.நீலமேகம், பிராபகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு நந்தகுமார், கண்ணன், ஆகியோர் நியமனம் செய்யயப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டு காலங்களாக இருக்கும். இடையே இவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அத்துடன் இந்த ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவிக் காலமும் முடிவுக்கு வரும்.

இதையும் படிங்க: சேலம் அருகே வானதி சீனிவாசன் மகன் கார் விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.