ETV Bharat / state

‘மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு மோடியும் எங்க டாடியும் தான் காரணம்’ - உதயநிதி

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு மோடியும், எங்க டாடியும் தான் காரணம் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

dmk
dmk
author img

By

Published : Jan 26, 2020, 2:04 PM IST

Updated : Jan 26, 2020, 3:02 PM IST

சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம், திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலாளர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நடந்து முடிந்து மக்களவைத் தேர்தலில் நான் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்ததால்தான் 100 விழுக்காடு வெற்றியை, இந்தியாவையே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு வெற்றியை தமிழ்நாடு மக்கள் தந்தார்கள் என்கிறார்கள். கண்டிப்பாக, அது என்னுடைய பரப்புரைக்குத் தந்த வெற்றி இல்லை.

அந்த வெற்றிக்கு காரணம் இரண்டு பேர்... ஒன்று மோடி, இன்னொன்று எங்க டாடி. இந்த வெற்றி நம்முடைய தலைவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகமும், கறுப்பு சிவப்பும், தமிழ்மொழியும் என்னுடைய ரத்தத்தில் ஊறிப்போனவை” என்றார்.

இதையும் படிங்க: திமுகவினரை சைக்கோ என சாடிய அமைச்சர் தங்கமணி

Intro:சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு பிரம்மாண்ட வீரவணக்க பொதுக்கூட்டம் திமுக திருவள்ளுர் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றதுBody:சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு பிரம்மாண்ட வீரவணக்க பொதுக்கூட்டம் திமுக திருவள்ளுர் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்,பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணசாமி , மாவட்ட செயளாலர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தலில் நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததால் தான் 100 சதவீத வெற்றியை இந்தியாவையே திரும்பி பார்க்க கூடிய அளவுக்கு வெற்றியை தமிழக மக்கள் தந்தார்கள்.

கண்டிப்பாக அது என்னுடைய பிரச்சாரத்திற்கு தந்த வெற்றி இல்லை எனவும் அந்த வெற்றிக்கு காரணம் இரண்டு பேர் ஒன்னும் மோடி இன்னொன்று எங்க டாடி.

இந்த வெற்றி நம்முடைய தலைவருக்கு கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன்.

மாவட்ட செயலாளர் கூறினார் சினிமாவும் அரசியலும் இரண்டு கண்கள் என்று ஆனால் அது தவறு.

நடிப்பு அதை நான் மனதளவில் தான் செய்கிறேன்.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகமும் கருப்பு சிவப்பும் தமிழ்மொழியும் என்னுடைய ரத்தத்தில் ஊறிப் போனது.

எனவே இந்த கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கொண்டு நான் கலந்துகொள்ளும் மொழிப்போர் தியாகிகளுக்கான முதல் கூட்டத்தில் இந்த ஆவடி நகரத்தில் கலந்து கொள்வது நான் மிகவும் பெருமையாக எண்ணுகிறேன்.

மொழிப் போரில் உயிர்நீத்த அனைவரின் பெயரையும் அவர்களின் முழு விவரங்களையும் பட்டியலிட்டு பகிர்ந்துகொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

அதேபோல் திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழிக்கும் என்ன பங்கு உண்டு என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.

தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டு மொழி என்ற அமைச்சகத்தை உருவாக்கிச் தீவிரமாக செயல்படுத்தியது நமது தலைவர் கலைஞர்தான்.

இந்த அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அமைச்சர் தான் தமிழ்வளர்ச்சித்துறை காக இல்லாமல் இந்திய வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார் அதற்கு காரணமும் நீங்கள் தான் என கூடியிருந்த கூட்டத்தை பார்த்து கூறினார்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழி கொள்கை விவகாரத்தில்

அண்ணாவும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டார் என முட்டாள்தனமான பேட்டியை அளித்துவிட்டு திருத்தி கொண்டார்.

தமிழை ஒடுக்குவதற்கும் மறக்கடிக்கும் வேலைகள்தான் இந்த அடிமை எடப்பாடி ஆட்சி கவனம் செலுத்துகிறது என கூறினார்.

உலகப் பொதுமறை திருக்குறளுக்கு காவி போட்டவர்கள் அதிமுகவினர் எனவும் கொஞ்சம் விட்டிருந்தாள் திருவள்ளுவரையே நாங்கள் தான் கூட்டி வந்தோம் என கூறியிருப்பார்.

அப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சி ஆமாம் சாமி போட்டு அவர்களும் இந்த அதிமுகவினர் தான் என்றார்.Conclusion:
Last Updated : Jan 26, 2020, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.