ETV Bharat / state

Maamannan: மாமன்னன் வெற்றிக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடந்ததற்காக, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Jul 7, 2023, 6:01 PM IST

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், கடந்த வாரம் வெளியான படம், மாமன்னன். இப்படத்தில் வடிவேலு வித்தியாசமான வேடத்தில் நடித்துக் கலக்கியிருந்தார். மேலும் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையரங்குகளில் இன்றுவரை தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. வடிவேலு மாமன்னன் கதாபாத்திரத்தில் இதுவரை இல்லாத வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலு இப்படியும் நடிப்பாரா என்று வியந்தபடி தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஃபகத் ஃபாசில் நடிப்பும் உதயநிதியின் நடிப்பும் இப்படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருந்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர்ந்து தனது படங்களில் பட்டியல் இன மக்களின் வலியையும், அவர்களது வாழ்க்கையையும் பதிவு செய்து வருபவர். இதிலும் அதே போன்ற கதையை பதிவு செய்துள்ளார். ஆதிக்க சாதியினர் எப்படி ஒடுக்கப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் ஒடுக்குகின்றனர் என்றும், அரசியலில் தனித் தொகுதி என்பது பெயரளவிற்குத்தான், அவர்களும் ஆதிக்க சாதியினரிடம் அடங்கிப் போக வேண்டிய நிலைதான் என்பது இன்றுவரை இச்சமூகத்தில் இருக்கிறது என்று இப்படத்தின் மூலம் சொல்லியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக மாமன்னன் திரைப்படத்தை அறிவித்திருந்தார். தனது கடைசிப் படம் சமூகநீதி பேசும் ஒரு படமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றிக்கு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். படத்தில் நடித்தவர்களுக்கும் பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் மாமன்னன் வெற்றி குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. #MAAMANNAN ஐ #Megablockbuster ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும் என்று பதிவிட்டிருந்தார்.

மாமன்னன் தற்போதைய சமூகத்திற்குத் தேவையான ஒரு படம் என்று படம் பார்த்த பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், கமல், தமிழக முதல்வர் ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்டோரும் படத்தைப் புகழ்ந்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக தலைவர்கள் யாரையும் கண்டு எப்போதும் பயப்பட்டதே கிடையாது - அமைச்சர் உதயநிதி பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.