சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை செல்லும் பிரதான சாலை காமராஜபுரம் பகுதியில் தனியாருக்குச் செந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் அங்கு மதுபோதையில் வந்த இருவர், வாகனத்தை தூரமாக நிறுத்திவிட்டு பெட்ரோல் போடுமாறு ஊழியரிடம் கூறியுள்ளனர்.
வாகனத்தை அருகில் எடுத்துவருமாறு ஊழியர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவ்விருவரும் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, சக ஊழியர்கள் மதுபோதையில் இருந்த இருவரையும் பிடித்து சங்கர் நகர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் பம்மல் பகுதியைச் சேர்ந்த சரவணன்(21), பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார்(21) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தானிக்கு 4 ஆண்டு சிறை