சென்னை கோடம்பாக்கம் சுப்புராயன் தெருவைச் சேர்ந்தவர் சியாமளா (67). இவர் அதே பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
நேற்று (அக். 06) முன்தினம் இவரை செல்போனில் தொடர் கொண்ட அடையாளம் தெரியாத நபர், எஸ்பிஐ வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாகக் கூறியுள்ளார். மேலும், தங்களது ஏடிஎம் கார்டு காலாவதி ஆகவுள்ளதால் அதனைப் புதுப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை நம்பி மூதாட்டி சியாமலா தனது வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளார். தகவல்களைப் பெற்ற பின்னர் இணைப்பைத் துண்டித்த நபர் சில நிமிடங்களில் சியாமலா வங்கிக் கணக்கிலிருந்து 66 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.
இதேபோல் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த தர்மம்பாள் (68) என்ற மூதாட்டியிடமும் பேசி 75 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த அசோக் நகர் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பப் பெண்களைக் குறிவைத்து ஏமாற்றிய மோசடி மன்னன் கைது!